பாரந்தூக்கியின் பகுதிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு..!
பாரந்தூக்கியின் பகுதிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட 32 வயது வெளிநாட்டு ஊழியர் மாண்டதாகமனிதவள அமைச்சு கூறியுள்ளது.
வேலையிட விபத்து 1 மண்டாய் குவாரி (Mandai Quarry) ரோட்டில் நேற்று (22 ஜூன்) காலை 10.15 மணியளவில் நேர்ந்தது.
இந்தியாவைச் சேர்ந்த ஊழியர், பாரந்தூக்கிக்கு அடியில் இருந்த கருவிப் பெட்டியிலிருந்து சில கருவிகளைஎடுத்துக்கொண்டிருந்தார்.
பாரந்தூக்கி அப்போது அவரை நோக்கித் திரும்பியதில் ஆடவர் பாரந்தூக்கியின் பகுதிகளுக்கு இடையேசிக்கிக்கொண்டார்.
அவர் பின்னர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் மாண்டார்.
சம்பவத்தின் பின்னணியில் சூது ஏதுமில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக்காவல்துறையினர் கூறினர்.
பொருள் தூக்கும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தும்படி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் China Construction (South Pacific) Development Co எனும் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாரந்தூக்கியைச் செயல்படுத்தப்படும்போது அதைச் சுற்றித் தடுப்புகளும் எச்சரிக்கை அறிவிப்புகளும்வைக்கப்படவேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியது.
இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் 27 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.