வெளிநாட்டு ஊழியர்களிடம் தமது வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக முதலாளிகள் 1000 முதல் 3000 வெள்ளி வரை சட்டவிரோதமாக பணம் அறவிடுகின்றனர்.

0

வெளிநாட்டு ஊழியர்களிடம் தமது வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக முதலாளிகள் 1000 முதல் 3000 வெள்ளி வரை சட்டவிரோதமாக பணம் அறவிடுகின்றனர்.

தங்­கள் வேலையை உறு­திப்­ப­டுத்த முத­லா­ளி­கள் கேட்­கும் சட்­ட­வி­ரோத தொகை­யைச் செலுத்­தி­ய­வர்­களில் பாதிப் பேர்(கிட்­டத்­தட்ட 2,400 வெளி­நாட்டு ஊழியர்கள்) தொடர்ந்து சிங்கப்பூரில்பணிபுரிகின்றனர். மற்­ற­வர்­கள் தங்­கள் நாடு திரும்ப முடிவு செய்­தார்­கள் என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோபோ கூன் தெரி­வித்­துள்ளார்.

2016லிருந்து 2020 வரை மனி­த­வள அமைச்சு புல­னாய்வு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களில் இது பற்றிதெரிய வந்­தது. சுமார் 20 சதவீதமானோர் புதிய வேலை­யில் சேர்­கின்­ற­னர். அதே சம­யம் 30 சதவீதமானோர்  சட்­ட­வி­ரோத தொகை தொடர்­பான சிக்­கல்­கள் தீர்க்­கப்­பட்ட பிற­கும் தங்­கள் முத­லா­ளி­க­ளுக்­காகதொடர்ந்து பணி­யாற்ற முடிவு செய்­கின்­ற­னர்.

பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளி­டம் எந்­தக் கட்­ட­ண­மும் வசூ­லிக்­கக் கூடாது என்­ப­தில் உறு­தி­யாகஉள்ள வேலை­வாய்ப்பு முக­வர் பங்­காளி களி­டம் அவர்­க­ளைப் பரிந்­து­ரைப்­ப­தன் மூலம் ஊழி­யர்­கள்இங்கு புதிய வேலை­யில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு அமைச்சு உத­வு­வதாக டாக்­டர் கோ கூறி­னார்.

ஊழி­யர்­கள் தங்­க­ளி­டம் முத­லா­ளி­கள் சட்ட விரோத தொகையை வசூ­லிப்­பது தொடர்­பில் புகா­ர­ளித்த பிற­கு, அவர்­கள் தொடர்ந்து வரு­மா­னம் ஈட்­டு­வ­தற்­காக இங்­கேயே தங்க முடி­யும் என்­பதை இது உறுதிசெய்­கிறது,” என்று அமைச்­சர் மேலும் சொன்­னார். சட்­ட­வி­ரோத தொகையை வசூ­லிப்­பது தொடர்­பி­லான முதலாளிகள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டால், பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளைத் திருப்பி அனுப்ப முத­லா­ளி­கள் அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள். 

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­கள், ஊழி­யர்­களி­டம் வசூ­லித்த பணத்­தைத் திருப்­பித் தரப்படுவதைஅமைச்சு உறுதிசெய்யும்.

Leave A Reply

Your email address will not be published.