ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் பாதிரியாரை தாக்க முயற்சி 22 வயது நபர் கைது!

0

பிப்ரவரி 9 ஆம் தேதி காலை சிங்கப்பூரில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாரை தாக்க முயன்றதாகக் கூறப்படும் 22 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் அப்பர் தாம்சனில் உள்ள ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் காலை 10:30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றது. பொலிஸாரின் தகவலின்படி , வழக்கமாக தேவாலயத்திற்குச் செல்லும் நபர், ஆராதனை முடிந்ததும் பாதிரியாரை தாக்க முயன்றார்.

உடனே தேவாலய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி போலீசில் ஒப்படைத்தனர். அவனிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை, பாதிரியாருக்கு வெளிக்காயங்கள் எதுவும் இல்லை.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக பரிசோதனைக்காக அவர் மனநல காப்பகத்திற்கு அனுப்பப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.