லகூனா பார்க் குடியிருப்பில் முதியவர் கொலை 23 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு!

0

மெரீன் பரேடில் உள்ள லகூனா பார்க் குடியிருப்பில், 23 வயது இளைஞர் ஒருவர் 68 வயது முதியவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நவம்பர் 13 அன்று கட்டிடத்தின் 13ஆம் மாடி லிப்ட் முன்பகுதியில் நடந்தது. மயக்க நிலையில் கிடந்த முதியவர் தாம் லுப் ஹோங் என்பவர், உடனே சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

தாக்குதலுக்கு முன்பு இருவருக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டிருக்கும் என்று போலீஸ் கூறியுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு சந்தேக நபரான யியோ ஜீ ஹாவ் கைது செய்யப்பட்டார். அங்கு இரண்டு பேனாக்கத்தியும் மீட்கப்பட்டன. முதலில் ‘கடுமையான காயம் ஏற்படுத்தல்’ என்ற குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பின்னர் அது ‘கொலை’ குற்றமாக மாற்றப்பட்டது.

நவம்பர் 15 அன்று வீடியோ வழியாக நீதிமன்றத்தில் ஆஜரான யியோ, தன்னை நேரடியாக மரண தண்டனை விதிக்க நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்..

ஆனால் வழக்கறிஞர்கள், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும், இப்போது எந்தத் தீர்ப்பும் வழங்க முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும், அவர் மூன்று வார மனநிலை பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். வழக்கு டிசம்பர் 5 அன்று மீண்டும் விசாரிக்கப்படும்.

யியோ கொலை செய்தது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.