டாம்பின்ஸ் Coffee shop அருகே கத்திக்குத்து சம்பவம் 53 வயது நபர் கைது!
டிசம்பர் 19 அன்று சிங்கப்பூரின் டாம்பின்ஸ் பகுதியில் உள்ள ஒரு Coffee shop அருகே நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். 53 வயதான முகமது சுஃபியான் முகமது சப்ரி என்பவரே சந்தேகநபர். மற்றொரு நபரை கத்தியால் தாக்கியதாக அவர் மீது நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்த நபரின் முதுகிலும் கை முன்பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டது
இந்த சம்பவம் மாலை நேரத்தில், மக்கள் அதிகமாகச் சென்று வரும் பரபரப்பான பகுதியில் நடந்தது. அருகில் இருந்தவர்கள், ரத்தம் படிந்த சட்டையுடன் ஒருவர் அந்த இடத்திலிருந்து நடந்து சென்றதாக தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த ஆறு மணி நேரத்திற்குள் போலீசார் சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், முன்பு விதிக்கப்பட்ட சிறை தண்டனையிலிருந்து நிபந்தனையுடன் முன்கூட்டியே விடுதலையான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த விடுதலையின் முக்கிய நிபந்தனை, மீண்டும் எந்த குற்றத்திலும் ஈடுபடக் கூடாது என்பதுதான்.
தற்போது ஏற்பட்ட இந்த புதிய குற்றச்சாட்டால், அவருக்கு மேலும் நீண்ட சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கத்திக் குத்து குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை, தண்டனை அடி மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்.