Yishun கட்டுமான தள விபத்தில் 55 வயது தொழிலாளி உயிரிழப்பு!

0

Yishun கட்டுமான தளத்தில் இருந்த 55 வயது தொழிலாளி ஒருவர் மீது ஸ்டீல் கேட் விழுந்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அக்டோபர் 21 அன்று பிளாக் 413 Yishun ரிங் ரோட்டில் இந்த விபத்து நடந்தது. சீன நாட்டவரான தொழிலாளி, கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை.

மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவிக்கையில் , தொழிலாளி இரும்பு கேட் சட்டகத்தை தள்ளும் போது அது கவிழ்ந்து அவர் மீது விழுந்தது. கட்டுமான தளம் ஜின் ஷான் கன்ஸ்ட்ரக்ஷனால் நிர்வகிக்கப்படுகிறது, நீ சூன் டவுன் கவுன்சில் திட்ட உருவாக்குநராக உள்ளது.

விபத்துகளைத் தடுக்க சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஸ்லைடிங் கேட்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

MOM வேலை தளத்தில் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.