கிளெமெண்டி குடியிருப்பில்63 வயது நபர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு!
இது தொடர்பாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையும் (SCDF), காவல்துறையும் (SPF) இரவு சுமார் 8.55 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாக தெரிவித்தன. அந்த குடியிருப்பு கட்டிடத்தின் கீழே அந்த நபர் அசைவில்லாமல் படுத்திருந்ததாக காவல்துறை கூறியது.
சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவியாளர் அவர் உயிரிழந்ததாக உறுதி செய்தார். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், இது குற்றச்செயலாக சந்தேகிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.