மத்திய சீனாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் !
ஜனவரி 19 அன்று, மத்திய சீனாவில் அமைந்துள்ள பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரவு 11 மணிக்கு தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரவு 11:38 மணிக்கு தீயை வெற்றிகரமாக அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.