வெளிநாட்டு ஊழியர்களிடம் தமது வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக முதலாளிகள் 1000 முதல் 3000 வெள்ளி வரை சட்டவிரோதமாக பணம் அறவிடுகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்களிடம் தமது வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக முதலாளிகள் 1000 முதல் 3000 வெள்ளி வரை சட்டவிரோதமாக பணம் அறவிடுகின்றனர்.
தங்கள் வேலையை உறுதிப்படுத்த முதலாளிகள் கேட்கும் சட்டவிரோத தொகையைச் செலுத்தியவர்களில் பாதிப் பேர்(கிட்டத்தட்ட 2,400 வெளிநாட்டு ஊழியர்கள்) தொடர்ந்து சிங்கப்பூரில்பணிபுரிகின்றனர். மற்றவர்கள் தங்கள் நாடு திரும்ப முடிவு செய்தார்கள் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோபோ கூன் தெரிவித்துள்ளார்.
2016லிருந்து 2020 வரை மனிதவள அமைச்சு புலனாய்வு மேற்கொண்ட நடவடிக்கைகளில் இது பற்றிதெரிய வந்தது. சுமார் 20 சதவீதமானோர் புதிய வேலையில் சேர்கின்றனர். அதே சமயம் 30 சதவீதமானோர் சட்டவிரோத தொகை தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பிறகும் தங்கள் முதலாளிகளுக்காகதொடர்ந்து பணியாற்ற முடிவு செய்கின்றனர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்பதில் உறுதியாகஉள்ள வேலைவாய்ப்பு முகவர் பங்காளி களிடம் அவர்களைப் பரிந்துரைப்பதன் மூலம் ஊழியர்கள்இங்கு புதிய வேலையில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு அமைச்சு உதவுவதாக டாக்டர் கோ கூறினார்.
ஊழியர்கள் தங்களிடம் முதலாளிகள் சட்ட விரோத தொகையை வசூலிப்பது தொடர்பில் புகாரளித்த பிறகு, அவர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டுவதற்காக இங்கேயே தங்க முடியும் என்பதை இது உறுதிசெய்கிறது,” என்று அமைச்சர் மேலும் சொன்னார். சட்டவிரோத தொகையை வசூலிப்பது தொடர்பிலான முதலாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், பாதிக்கப்பட்ட ஊழியர்களைத் திருப்பி அனுப்ப முதலாளிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஊழியர்களிடம் வசூலித்த பணத்தைத் திருப்பித் தரப்படுவதைஅமைச்சு உறுதிசெய்யும்.