மீண்டும் அடுத்த கட்ட கிருமித் தொற்று பரவல்..!

0

சிங்கப்பூரில் 60 வயதைத் தாண்டிய மூத்தோரில் 80,000 பேர் இன்னும் கூடுதல் தடுப்பூசியைப்போட்டுக்கொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார். 

அடுத்து வரும் மாதங்களில் அடுத்த கட்ட கிருமிப்பரவல் BA.4, BA.5 வகை ஓமக்ரான் கிருமிகளால்ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் அதை விரைவில் செய்யும்படி அமைச்சர்வலியுறுத்தினார். 

மக்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துகொண்டே போகும் வேளையில் இன்னொருகிருமிப்பரவல் சூழல் உருவெடுக்கலாம் என்று அதிகாரிகள் பல முறை எச்சரித்துள்ளனர். COVID-19 நோய்க்கிருமியும் உருமாறி டெல்ட்டா, ஓமக்ரான் போன்ற கிருமிகளாகிவிட்டது. 

கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்புமருந்துகளை 3 முறை செலுத்தினால் மட்டுமே அவை சிறப்பாக நோயைஎதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்றார் திரு ஓங். 

முதல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத 60 வயதைத் தாண்டிய மூத்தோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் வாய்ப்பு 4  விழுக்காடாக உள்ளது என்றார் அமைச்சர். 

இரண்டாம் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்தோருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் வாய்ப்பு, 1 விழுக்காடு. மூன்றாம்  தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்தோருக்குத் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்படும் வாய்ப்பு 0.3 விழுக்காடு.

Leave A Reply

Your email address will not be published.