சிங்கப்பூர் நாணயத்தின் பெறுமதியில் வீழ்ச்சி..! வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்பு..!
அண்மைக் காலமாக சிங்கப்பூர் நாணயத்தின் பெறுமதியில் வீழ்ச்சி காணப்படுகின்றது.
இதனால் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகின்றது.
மேலும் பருவநிலை மாற்றம், உக்ரேன்-ரஷ்யா போர் ஆகியவை காரணமாக உணவு விலை இவ்வாண்டுபெரிதும் பாதிப்படையும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இது நடுத்தர வருமானக் குடும்பங்களை அதிகம் பாதிக்கும். தவிர, வெளிநாட்டு பணியாளர்கள்உணவிற்காக செலவிடும் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தின் பெரும் பகுதி உணவுக்கே சென்றுவிடுவதாக வருத்தம்தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களின் சேமிப்பு குறைவடைந்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் தனக்குத் தேவையான உணவுப் பொருள்களில் 30 சதவீதம் உணவுப்பொருள்களை உள்ளூரிலேயே தயாரிக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
அந்த நிலையை எட்டிவிட்டால், பணவீக்கத்தின் போது பெரிய அளவில் சிரமம் இருக்காது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், உணவு வீணாகாமல் அதை மீட்போர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
காலாவதித் தேதி கடந்த பிறகு, விற்பனை செய்ய முடியாத நிலையிலும் கெட்டுப் போகாமல் இருக்கும்உணவுகள் மீட்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு மீட்கப்பட்ட உணவை ஏற்றுக்கொள்வோருக்கு அது விநியோகிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களில் செங்காங் உணவு மீட்பு அமைப்பு, ஒவ்வொரு வாரமும் கூடுதலாக 15லிருந்து 20 டன் உணவை மீட்டுள்ளது. அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் அந்த உணவுப்பொருள்கள்குப்பையில் வீசப்பட்டிருக்கும்.