சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முக்கிய தகவல்கள்!
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களை கவனிப்பதற்காகவே இங்கு வருகின்றனர்.
ஆனால், சில நிறுவனங்கள் அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை. இது தொழிலாளர்களுக்கு பெரும் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தி அவர்களிடையே வருத்தத்தை உண்டாக்குகிறது.
சிங்கப்பூர் தொழிலாளர் நல அமைச்சின் (MOM) விதிமுறைகளின்படி, ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள் மீது MOM-இடம் நேரடியாக புகார் அளிக்கலாம். 64385122 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரைத் தெரிவிக்கலாம்.
தேவைப்பட்டால், நேரடியாக MOM அலுவலகத்திற்குச் சென்று உங்கள் புகாரை முறையிட்டு, தீர்வு காண முயற்சி செய்யலாம்.
பணிபுரியும்போது உங்களுக்கு விபத்து ஏற்பட்டால், நிறுவனம் உங்களுடைய மருத்துவச் செலவுகளையும், ஏற்பட்ட இழப்புக்கான இழப்பீட்டையும் வழங்க வேண்டியது கட்டாயமாகும்.
அவ்வாறு வழங்கத் தவறினால், நீங்கள் MOM-ல் (Ministry of Manpower) புகார் அளிக்கலாம். MOM உங்களுக்கு மருத்துவச் செலவுகளையும், இழப்பீட்டையும் பெற்றுத்தரும்.
மேலும் வாசிக்க
- சிங்கப்பூரில் நடைமுறைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகள்! சம்பளம், DRC மாற்றங்கள்!
- 2024 இல் சிங்கப்பூருக்கு செல்ல எந்தெந்த Pass, Permit Visaக்களுக்கு எவ்வளவு Approval காலம் எடுக்கும்?
- சிங்கப்பூரில் Driving Licence எடுப்பது எப்படி? எவ்வளவு செலவாகும்? புதிய விதிமுறைகள் என்னென்ன?
- தமிழ்நாட்டில் Skill Test அடிக்க Institute கள் Open இல் உள்ளன! ஆனால் Test அடிக்கலாமா?
- 2024 இல் சிங்கப்பூரில் எந்தெந்த Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம்!