விழுப்புரத்தில் பட்டாசு வெடிப்பு துயரம் ஒருவர் பலி, இருவர் படுகாயம்!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூரைச் சேர்ந்த டேவிட் வில்சன், ஆண்டனி பிரேம்குமார், பவுல்ராஜ் ஆகிய மூவர் 31திகதிஇரவு இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது, அதிலிருந்து வந்த
ராக்கெட் பட்டாசு ஒன்று இருசக்கர வாகனத்தில் இவர்கள் வைத்திருந்த பட்டாசின் மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டது.
தீப்பொறி இவர்களது வாகனத்தில் இருந்த பட்டாசுகளுக்கு பட்டதால் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர்.
அப்பகுதி மக்கள் விரைவாக அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை அளிக்கபட்டும், 22வயதுடை டேவிட் வில்சன் உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.