கார் டயர்களின் காற்றை வெளியேற்றிய 23 வயதான நபர் குற்றம் சாட்டப்பட்டார்!

0

23 வயதான பெஞ்சமின் சியா யிட் லூங், நவம்பர் 21 அன்று உட்லண்ட்ஸ் கார்பார்க்கில் ஐந்து கார்களின் டயர்களில் இருந்த காற்றைவெளியேற்றிய குற்றத்திற்காகச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர் குற்றம் சாட்டப்பட்டார்.

பிளாக்ஸ் 517A மற்றும் 519A, உட்லண்ட்ஸ் டிரைவ் 14 இல் உள்ள கார்களின் கண்ணாடிகளில் துண்டுப் பிரசுரங்களையும் அவர் வைத்தார். இந்தச் சம்பவம் செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்தது.

மதியம் 12.50 மணியளவில் ஒரு கார் உரிமையாளர் தனது டயர்கள் பஞ்சராயிருப்பதை கண்டபோது பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கேமரா காட்சிகளைப் பயன்படுத்தி சியா அடையாளம் காணப்பட்டு அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

சியா பொது எரிச்சலை ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார், இது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவர் S$5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார், மேலும்
இவ்வழக்கு விசாரணை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.