மூத்த மகளுக்கு அதிக பாசம் செலுத்திய தாயை கொன்ற இளைய மகள்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை கிழக்கு குர்லா, குரேஷி நகரில், 71 வயதான சபீரா பானு ஷேக் என்பவரை, அவரின் 41 வயதான இளைய மகள் ரேஷ்மா முஃபர் காசி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மாலை, வீட்டில் தாயும் மகளும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் ரேஷ்மா, சமையலறை கத்தியை கொண்டு தாயை வயிறு, மார்பு, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் குத்தி கொலை செய்தார்.
தாயை கொன்ற பிறகு, ரேஷ்மா சுனாபாட்டி காவல் நிலையத்துக்கு சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். தாயின் அதிக அன்பு தனது மூத்த சகோதரிக்கே இருக்கிறது என்ற பொறாமை காரணமாக இந்த கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார், ரேஷ்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.