அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டு 11 வயது மாணவி உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூரில் 11 வயது மாணவி மாளவிகா அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்தார்.
பள்ளிக்கு செல்லும் முன் அதிக அரிசி சாப்பிட்டதால் மதியம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆசிரியர்கள் அவரை ஓய்வெடுக்க வைத்துவிட்டு, சகோதரிக்கு தகவல் தெரிவித்தனர்.
மாளவிகா வீட்டுக்கு சென்றதும் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியபோதும், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால், ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமான அரிசி சாப்பிட்டது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சரியான நேரத்தில் சேர்த்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவம் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.