ஆன்மீக யாத்திரை சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது!
குஜராத் மாநிலத்தின் டாங் மாவட்டத்தில் ஞாயிறு அதிகாலை பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானது.
ஆன்மீக பயணம் மேற்கொண்ட 48 பேர் பேருந்தில் இருந்தனர். மலைப்பகுதியில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய பிரதேசத்தின் குணா, சிவபுரி, அசோக் நகர் பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏனைய சிறு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விபத்து குறித்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.