சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் மாற்றம் – பயணிகள் தடுமாறல்!

0

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் சாலைகள் முழுவதும் பனி மூடலாக இருந்ததால், வாகன ஓட்டுநர்கள் முன்பகுதி விளக்குகளை எரியவிட்டு கவனமாக சென்றனர்.

மேலும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வழியாக செல்லும் ரெயில்கள் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமமடைந்தனர்.

வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்தன, அதேசமயம் 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பல விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூற்றுப்படி, நாளையும் இதே போன்ற பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சென்னையில் உள்ள பனிமூட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் வேடிக்கையாக கருத்துகள் பகிர்ந்து கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.