நெடுஞ்சாலையில் பறந்த உலோகத் தகடு காரின் கண்ணாடி உடைத்தது!
மலேசியாவின் செலாங்கூர் நெடுஞ்சாலையில், ஓட்டுநர் காரை செலுத்திக் கொண்டிருந்த போது, ஒரு உலோகத் தகடு எதிர்பாராத விதமாக பறந்து வந்து காரின் விண்ட்ஷீல்டை மோதி உடைத்தது. பிறகு, அது சீட்டின் அடியில் விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக, அந்த இடத்தில் யாரும் அமரவில்லை; இல்லையெனில், இது மிகப்பெரிய விபத்தாகி இருக்கக்கூடும்.
இந்த சம்பவம் பிப்ரவரி 18ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடந்தது. முன்னால் சென்ற ஒரு வாகனத்திலிருந்து அந்த உலோகத் தகடு பறந்து வந்து காரின் கண்ணாடியை தாக்கியது. பின்னர், ஓட்டுநர் பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்தி, சேதத்தை வீடியோவில் பதிவு செய்தார். வீடியோவில் முன் மற்றும் பின் இருக்கைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்தன. இந்த காட்சி சமூக ஊடகங்களில் விரைவாக பரவி வைரலானது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் எவருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.