சிங்கப்பூரில் நர்ஸாக வேலை செய்ய எப்படி விண்ணப்பிக்கலாம்?
சிங்கப்பூரில் நர்ஸாக பதிவு செய்ய முதலில் நீங்கள் B.Sc Nursing அல்லது GNM முடித்திருக்க வேண்டும். இதற்க நீங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நர்ஸாக இருக்க வேண்டும். உங்களிடம் அனுபவமும் இருக்க வேண்டும் மேலும், சிங்கப்பூரில் ஒரு தொழில் தருநர் (Employer) தேவை ஏனெனில் Singapore Nursing Board (SNB) உங்கள் விண்ணப்பத்தை முதலாளி இல்லாமல் ஏற்காது
தொழில் தருநரை இரண்டு வழிகளில் பெறலாம்:
- ஏஜென்சி மூலம்– இது எளிதான வழியாகும், ஆனால் சில ஏஜென்சிகள் கட்டணம் வசூலிக்கலாம். சில முதலாளிகள் வேலைக்குச் சேர்ந்த பிறகு இந்த கட்டணத்தை திருப்பித் தரலாம்.
- நேரடி நியமனம் – நீங்கள் ஆன்லைனில் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் வேலைக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
முதலாளி கிடைத்த பிறகு, SNB பதிவிற்கான ஆவணங்கள் தயாராக இருக்க வேண்டும்:
- பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- நர்ஸிங் டிரான்ஸ்கிரிப்ட் (Clinical & Dissertation details)
- பயிற்சி சான்றிதழ்கள், பட்டப்படிப்பு/டிப்ளமோ சான்றிதழ்கள்
- இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நர்ஸ் சான்றிதழ் அனுபவ சான்றிதழ்
- அனைத்து ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்
SNB உங்கள் கல்வி, அனுபவம் மற்றும் பதிவு விவரங்களைச் சரிபார்க்கும். அனுமதி கிடைத்தால், லைசென்ஸ் தேர்வு (MCQ Type Exam) எழுத வேண்டும். இதில் மருத்துவம், அறுவை சிகிச்சை, மருந்தியல், தொற்று கட்டுப்பாடு, அவசரநிலை நடைமுறைகள், நர்ஸிங் நெறிமுறைகள், தொழில்முறை நடத்தை போன்ற தலைப்புகளில் கேள்விகள் வரும். தேர்ச்சி பெற்ற பிறகு, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
அனைத்து நடைமுறைகளும் முடிந்தவுடன், S-Pass Visa பெறுவதற்காக உங்கள் முதலாளி விண்ணப்பிக்க உதவுவார். விசா கிடைத்தவுடன், நீங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நர்ஸாக வேலை செய்ய தொடங்கலாம்.