$135,000 மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0

சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் தடுப்பு குழு (CNB) ரெட்ஹில் பகுதியில் 25ஆம் திகதி இரவு நடத்திய தேடுதலில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து எஸ்$135,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்களை ஒரு காருக்கு அருகில் கண்டறிந்து கைது செய்தனர். அவர்களில் ஒருவர் 37 வயதானவரும் மற்றொருவர் 44 வயதானவரும் ஆவர்.

37 வயது சந்தேகநபர் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுமார் 1.89 கிலோ கனாபிஸ், கேட்டமின், மெத்தாம்பெட்டமின் மற்றும் 36 கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் ஈ-வேப்பரைசர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

44 வயது சந்தேகநபரின் காரை சோதனையிட்ட போது, சுமார் 900 கிராம் கனாபிஸ், மற்ற போதைப்பொருட்கள் மற்றும் 4 ஈ-வேப்பரைசர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது, இருவரும் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.