பீஹார் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை – 25 கோடி ரூபாய் நகைகள் பறிப்பு!
பீஹார் மாநிலத்தின் ஆரா நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது. வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆறு பேருக்கும் அதிகமான கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் கடையில் புகுந்தனர்.
இதை கண்டக் கடை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். கொள்ளையர்கள் ஊழியர்களை மிரட்டிய பிறகு, சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் முழுவதுமாக சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டது, இதையடுத்து காவல்துறை உடனடியாக விசாரணை தொடங்கியது.
கொள்ளையர்கள் ஆறு பேரில் இருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள் மற்றும் 2 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
தப்பிச் சென்ற மற்ற நான்கு கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றன கொள்ளையர்கள் முழுமையாக பிடிக்கப்படும் வரை காவல்துறை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.