சிங்கப்பூரில் PSA வேலைக்கு Skill Test அடிக்காமல் எந்தந்த வேலைகளுக்கு வர முடியும்

0

சிங்கப்பூரில் வேலை வாய்ப்புக்கான பல Pass உள்ளன. ஒவ்வொரு Pass க்கும் வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகள் பொருந்தும். அத்துடன், வேலைக்கு ஏற்ற சம்பள கட்டுப்பாடுகளும் உள்ளன. திறமையோ அல்லது டிகிரியோ இல்லாமல் இந்த சூழ்நிலையில் PSA (சிங்கப்பூர் துறைமுக ஆணையம்) வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

Driver மற்றும் Lashing Worker ஆகிய இரண்டு வேலைகளுக்கும் PSA இல்  வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் PSA க்கு Driver ஆக வரும்போது, இந்தியாவில் கனரக ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதுமானது. Lashing Work என்பது ஒரு கப்பலில் உள்ள சரக்குகளை (கன்டெய்னர்கள், வாகனங்கள், பொது சரக்கு போன்றவை) பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.

Work Permit இல் சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களுக்கான கட்டுப்பாடுகள்

இந்த பணிக்கு, ஏஜென்சி 3 முதல் 3.5 லட்சம் வரை பெற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. அத்துடன் சம்பளம் S$1200 முதல் S$1300 ஐ பெறலாம் என்று கூறப்படுகிறது.

12 மணி நேரம் இரண்டு ஷிப்ட் வேலை இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் மட்டுமே வேலை ஆகும். நீங்கள் தங்குவதற்கு கட்டணமும் உங்களது சம்பளம் இல் இருந்து பெற்றுக்கொள்வார்கள்.  சில வருட Work Experiance எடுத்த பிறகு Promotion மற்றும் சம்பள உயர்வு  என்பன பெற முடியும்.

Drivers ஆக வருவதாயின் சாதாரண Licence இருக்கக்கூடாது. ஆங்கில பேச மற்றும் மொழியை புரிந்திருக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

பெப்ரவரியில் சிங்கப்பூர் வருபவரா இருந்தால் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருங்கள்

இந்த வேலைக்காக சிங்கப்பூர் செல்வோர் துறைமுகத்தை விட்டு வெளி இடங்களில் ஓட்டக்கூடாது. முதல் மூன்று மாதங்களில் உங்களுக்கான பயிற்சி வழங்கப்படுமென கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.