டெல்லி விமான நிலையத்தில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம் – பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்பு!

0

ஜூலை 22-ஆம் தேதி மதியம் 12:12 மணியளவில் ஹாங்காங்கிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குச் வந்த ஏர் இந்தியா AI-315 விமானம், தரையிறங்கிய சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்தது.

தீ, விமானத்தின் துணை மின்சாதனமான APU-வில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தரையில் நிற்கும் விமானத்திற்கு மின் வசதிகள் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்றவற்றை வழங்கும் சிறிய இயந்திரமாகும். அதிர்ஷ்டவசமாக, APU தானாகவே செயலிழந்ததால் பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியபோது பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தீப்பற்றியது தெரியவர, பயணிகள் பீதி அடைந்து அவசரமாக வெளியேற முயன்றனர். பணியாளர்கள் விரைவாக செயல்பட்டதாலும், அனைவரும் விரைவாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

விமானத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை அந்த விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து பிரிவு (DGCA) தகவல் அளிக்கப்பட்டுள்ளது. APU-வில் தீவிபத்துகள் ஏற்பட்டது புதிதல்ல என விமானத் துறையினரும் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.