ஜூலை 31 Toto குலுக்கலில் $10 மில்லியன் பரிசு எதிர்பார்ப்பு!
ஜூலை 21, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கடைசி மூன்று Toto டிராக்களில் யாரும் முதல் பரிசை வெல்லவில்லை.
இதன் காரணமாக, ஜாக்பாட் பரிசுத்தொகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
ஜூலை 31 அன்று நடைபெறவிருக்கும் அடுத்த குலுக்கலில், மொத்தப் பரிசுத்தொகை $10 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2025-ம் ஆண்டில் மட்டும், டோட்டோ பரிசுத்தொகை $10 மில்லியனை எட்டுவது இது எட்டாவது முறையாகும். இந்தப் பிரம்மாண்ட பரிசை தட்டிச் செல்லும் நம்பிக்கையில், ஏராளமானோர் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் பூல்ஸின் கூற்றுப்படி, வியாழக்கிழமை டிரா வழக்கத்தை விட சற்று தாமதமாக நடைபெறும் – இது இரவு 9:30 மணிக்கு நடைபெறும்.