அப்பர் தாம்சன் சாலையில் கார் கவிழ்ந்து விபத்து 81 வயது மூதாட்டி காயம்!

0

ஆகஸ்ட் 18 காலை, அப்பர் தாம்சன் சாலையில் ஒரு கார் மினிபஸ் மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 81 வயது மூதாட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தின் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், சிகப்பு நிற கார் ஒன்று மினிபஸ் அருகே சக்கரங்கள் மேல்நோக்கித் தலைகீழாகக் கவிழ்ந்து கிடப்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டி உள்ளிட்ட அவசரக்கால வாகனங்கள் விபத்து நடந்த இடத்தில் நிற்பதும், காயமடைந்த மூதாட்டி ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படுவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

காலை சுமார் 8:55 மணியளவில் இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் 55 வயதான மினிபஸ் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் இல்லை என்றும், அவர் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.