புக்கிட் திமா சாலையில் தீப்பற்றிய கார்!
இன்று மாலை (ஆகஸ்ட் 17) சுமார் 5 மணியளவில் புக்கிட் திமா சாலையில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. நல்லவேளையாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், வெள்ளை நிற கார் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு, அதன் முன்பகுதி தீப்பிடித்து பயங்கரமாக எரிந்து கொண்டிருப்பதும், வானத்தில்
அடர்த்தியான கருப்புப் புகை எழுவதும் பதிவாகி இருந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) வெளியிட்டுள்ள அறிக்கையில், காரின் எஞ்சின் பகுதியில்தான் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீர்ப் பீய்ச்சி அடிக்கும் குழாய்கள் மூலம் தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.