Toa Payoh HDB குடியிருப்பில் தீ மூவர் மருத்துவமனையில் அனுமதி!
Toa Payoh Lorong 5, Block 63ல், ஆகஸ்ட் 22 அதிகாலை ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் சுமார் 50 பேர் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர்.
12வது மாடியில் உள்ள ஒரு வீட்டில், வரவேற்பறையில் தீ விபத்து தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
சமையலறையில் சிக்கியிருந்த ஒருவரையும் அவர்கள் மீட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவருக்கு புகை காரணமாக மூச்சு திணறல், தீக்காயம் ஏற்பட்டிருந்தது. மற்றொருவருக்கு சுவாசிப்பதில் சிரமம், மற்றொருவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
விசாரணையில், வரவேற்பறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரி ஸ்கூட்டர் (PMD) தீ விபத்துக்குக் காரணம் என தெரியவந்தது.
இரவு முழுவதும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டாம் என்றும், அசல் பேட்டரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு நினைவூட்டினர்.