கள்ளங் கிங் ஜார்ஜ் அவென்யூவில் கார்-லாரி மோதல் கார் ஓட்டுநர் தப்பியோட்டம், லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

0

ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு 10 மணியளவில் கல்லங் கிங் ஜார்ஜ் அவென்யூ (King George’s Avenue) மற்றும் லாவெண்டர் ஸ்ட்ரீட் (Lavender Street) சந்திப்பில் காரும் லாரியும் மோதிக்கொண்டன.

இந்த விபத்து தொடர்பான காணொலி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், லாரியின் முன் கண்ணாடி உடைந்து, சுக்குநூறாக சிதறிக் கிடப்பதைக் காணலாம்.

அருகில் இருந்த காரின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்துள்ளது. ஆனால், காவல்துறையினர் வருவதற்கு முன்பே கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

விபத்தில் மயக்கமடைந்த 57 வயது லாரி ஓட்டுநர், டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது, காவல்துறையினர் தப்பிச் சென்ற கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.