செம்பவாங் சாலை சந்திப்பில் போலீஸ் கார் சறுக்கி தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

0

ஆகஸ்ட் 21 அன்று மதியம், செம்பவாங் டிரைவ் மற்றும் செம்பவாங் கிரெசென்ட் வெஸ்ட் சந்திப்பில், ஒரு போலீஸ் கார் சறுக்கி, தடுப்புச் சுவரில் ஏறியதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து பிற்பகல் 1.15 மணியளவில் நடந்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஃபேஸ்புக்கில் வெளியான ஒரு வீடியோவில், அந்த போலீஸ் கார் தடுப்புச் சுவரில் ஏறியிருப்பதையும், விபத்து நடந்த இடத்தில் பல போலீஸ் அதிகாரிகளும் போக்குவரத்து போலீசாரும் இருப்பதையும் காட்டியது.

காரை ஓட்டிச் சென்ற 27 வயது அதிகாரி விசாரணைக்கு உதவுவதாக போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை இடம்பெறுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.