Toa Payohவில் நடந்த மோதல்லில் மூன்று இளைஞர்கள் கைது!
ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை Toa Payohவில் நடந்த மோதல் தொடர்பாக 21 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலை 9:50 மணியளவில், Toa Payoh லோரோங் 7, பிளாக் 10பி என்ற இடத்தில் ஒரு சண்டை நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரைத் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், டோவா பேயோ தொழிற்பேட்டையில் உள்ள ஒரு காப்பிக் கடையில் 10க்கும் மேற்பட்டோர் சண்டையிடுவது தெரிகிறது.
சிலர் மேசைகளையும் நாற்காலிகளையும் தூக்கி எறிந்தனர். மற்றவர்கள் கைகளாலும் பொருட்களாலும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். சில இளைஞர்கள் சண்டையை நிறுத்த முயன்றதும் காணொளியில் பதிவாகியுள்ளது. சண்டைக்குப் பின்னர், ஒருசிலர் சாலையைக் கடந்து அருகிலுள்ள குடியிருப்புகளை நோக்கி ஓடினர்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தக் காப்பிக் கடை அருகே பல காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியை காவல்துறை சுற்றி வளைத்து, பொதுமக்கள் நுழையாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சண்டை நடந்த இடம் முழுவதும் மேசைகளும் நாற்காலிகளும் கவிழ்ந்து கிடந்தன. உடைந்த கண்ணாடிகள் தரையில் சிதறிக் கிடந்தன. சில நாற்காலிகளில் இரத்தக்கறையும் காணப்பட்டது.