சிராங்கூனில் மதுபோதையில் லாரி ஓட்டுநர் காருடன் விபத்தை ஏற்படுத்தியதால் ஓட்டுநர் கைது!
செப்டம்பர் 7ஆம் தேதி இரவு, சிராங்கூன் சாலையில் மதுபோதையில் லாரி ஓட்டி வந்த 30 வயது ஆடவர் ஒருவர் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.
சென்ட்ரியம் ஸ்கொயர் அருகே இரவு சுமார் 8:55 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில், 49 வயது பெண்மணி ஒருவர் ஓட்டி வந்த வெள்ளை நிற டொயோட்டா விஷ் கார் மீது லாரி மோதியது. இதில் காயமடைந்த அப்பெண்மணி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஒரு கடுமையான குற்றமாகும். இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு $2,000 முதல் $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் இதே குற்றத்தைச் செய்தால் இன்னும் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.