ரோச்சோர் கனால் ரோடு மற்றும்லிட்டில் இந்தியாவில் போலீஸ் போலீசார் திடீர் சோதனை 7 பேர் கைது செய்யப்பட்டனர்!

0

சிங்கப்பூரில் உள்ள ரோச்சோர் கனால் ரோடு மற்றும் லிட்டில் இந்தியா பகுதிகளில் கடந்த செப்டம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய சோதனைகளின்போது, 16 முதல் 44 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்களும், ஒரு இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில், சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர், அரசு ஊழியரைத் தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞர், மதுபோதையில் போலி ஆவணத்துடன் பிடிபட்ட 16 வயது சிறுமி மற்றும் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 40 வயது நபர் ஆகியோர் அடங்குவர்.

மேலும், இ-சிகரெட் (vape) வைத்திருந்த குற்றத்திற்காக இருவர் பிடிபட்டனர்; அவர்களிடமிருந்து ஐந்து கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நள்ளிரவுச் சோதனையை மத்திய காவல் பிரிவும், ரகசிய கும்பல் தடுப்புப் பிரிவும் இணைந்து நடத்தின. இந்தப் பகுதிகளில் உள்ள 18 கேளிக்கை விடுதிகளில் சுமார் 100 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இப்பகுதியில் நடக்கும் சட்டவிரோத கும்பல் நடவடிக்கைகளையும் மற்ற குற்றங்களையும் கட்டுப்படுத்துவதே இந்தச் சோதனையின் முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இதுபோன்ற இடங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சோதனைகளைத் தீவிரப்படுத்துவோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.