நிக்கல் ஹைவேயில் மது போதையில் போக்குவரத்து சிக்னலில் மோதிய கார் 44 வயது ஆடவர் கைது!

0

செப்டம்பர் 13ஆம் தேதி நள்ளிரவு நடந்த கார் விபத்து ஒன்றில், 44 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிக்கல் ஹைவே மற்றும் சிம்ஸ் வே சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டியது மற்றும் ஓட்டுநர் உரிமம் தடை செய்யப்பட்டிருந்தும் வாகனத்தை இயக்கியது போன்ற குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, பீச் ரோடு வழியாகச் சென்றுகொண்டிருந்த அந்த காரை போக்குவரத்துப் காவல்துறையினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால், அந்தக் காரின் ஓட்டுநர் நிற்காமல் வேகமாக அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றார்.

சில நிமிடங்களிலேயே, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், கருப்பு நிறக் காரின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்திருப்பதைக் காண முடிந்தது. காரின் உடைந்த பாகங்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. மோதியதில் போக்குவரத்து விளக்குக் கம்பமும் வளைந்துவிட்டது.

விபத்து நடந்ததும், காரை ஓட்டிவந்த ஆடவர் மீட்கப்பட்டு, டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்துப் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.