பூன் லே பகுதியில் லாரி சைக்கில் மோதிய விபத்தில் 74 வயது பெண் உயிரிழப்பு!
செப்டம்பர் 20 அன்று பூன் லே பகுதியில் லாரி ஒன்று மோதிய விபத்தில், சைக்கிளில் சென்ற 74 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவம், பூன் லே பிளேஸ், பிளாக் 209 அருகே காலை சுமார் 8 மணியளவில் நடந்துள்ளது.
விபத்து நடந்தபோது சுயநினைவுடன் இருந்த அந்த பெண், உடனடியாக இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து 70 வயதான லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.