பாங்காக்கில் மருத்துவமனை முன்பு பெரும் பெரிய குழி உருவாகியது அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை!

0

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள வஜிரா மருத்துவமனை முன்பு, செப்டம்பர் 24 காலை எதிர்பாராத விதமாக மிகப் பெரிய குழி உருவாகி உள்ளது. சுமார் 30 மீட்டர் அகலம், 30 மீட்டர் நீளம், 50 மீட்டர் ஆழம் கொண்ட இந்த குழி, பாதையையே முழுமையாக விழுங்கி விட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாதுகாப்பு காரணமாக, மருத்துவமனை சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டன. வெளிநோயாளர் சிகிச்சையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்த சுமார் 3,500 நோயாளிகள் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், மருத்துவமனை கட்டிடம் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அருகிலுள்ள குடியிருப்பாளர்களும் முன்னெச்சரிக்கையாக தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்த இடியோடு விழுந்ததில் இரண்டு மின் கம்பங்களும், ஒரு போலீஸ் டோ டிரக் வாகனமும் குழிக்குள் சிக்கி விட்டன. புதிய MRT வஜிரா ரயில் நிலையம் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகிலேயே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதிகாரிகள் மண் உறுதிப்படுத்தும் பணிகள் மற்றும் போக்குவரத்து வழிகளை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.