யீஷூன் மற்றும் செங்காங்கில்போதைப்பொருள் கலந்தவேப் பொருட்கள் வைத்திருந்த42 மற்றும் 31 வயதுடைய இரு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்!
யீஷூன் மற்றும் செங்காங்கில் உள்ள இரு வீடுகளில், சட்டவிரோதமாக வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட “வேப்” கருவிகள் மற்றும் போதைப்பொருள் கலந்த “பாட்கள்” கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 30 அன்று 42 மற்றும் 31 வயதுடைய இரு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (CNB) சுமார் S$4,924 பணத்தையும் பறிமுதல் செய்தது.
யீஷூனில், யீஷூன் ரிங் ரோடு அருகே உள்ள வீட்டில் சோதனை நடத்திய CNB அதிகாரிகள், 42 வயதான ஒருவரை கைது செய்தனர். வீட்டினுள் பல வேப் பொருட்களும் பணமும் கிடைத்தன. பின்னர் அவர் சோதனையிலிருந்து மறைக்க குப்பை குழாயில் (rubbish chute) சில வேப் பொருட்களை போட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அங்கும் பல சட்டவிரோத வேப் பொருட்கள் மீட்கப்பட்டன.
அதே நாளில் மற்றொரு சோதனையில், செங்காங்கில் உள்ள பெர்ன்வேல் பகுதியில் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் எட்டு வேப் பொருட்களும், S$1,000-க்கும் மேற்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் கலந்த வேப்புகளை விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது கடுமையான குற்றம் என CNB தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது.