Work Pass அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இத்திட்டமானது அவசியமானது மனிதவள அமைச்சு..!

0

கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பயணிகள் எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயணத்திற்கு முந்தைய (Pre-departure) கோவிட்-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

singapore workers

அதன்படி மனிதவள அமைச்சகமானது (MOM) அடுத்த மாதம் தொடக்கம் முதலாளிகள் தங்களது புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக முதன்மை பராமரிப்புத் திட்டத்தை (Primary care plan) கட்டாயம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் Work Pass அனுமதிக்கான தேவைகளின் ஒரு பங்காக கட்டாயம் பெற வேண்டுமென்று மனிதவள அமைச்சகம் கூறியது.

இது சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் எஸ் பாஸ் (S Pass) மற்றும் வேர்க் பர்மிட் (Work Permit) இது பொறுந்துமென்று அது குறிப்பிட்டுள்ளது.

இத் திட்டமானது பெறும்பாலான பராமரிப்பு தேவைகளை உள்ளடக்கியுள்ளதுடன் இது வருடத்திற்கு $138 வெள்ளி வரை செலவாகுமென்று கூறப்படுகிறது.

singapore workers

துறைமுக, கட்டுமான மற்றும் செயல்முறை துறைகளில் வேலை செய்பவர்களுக்கு இத் திட்டமானது பொறுந்தும்.

மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் மற்றும் Work Pass அனுமதிக்கான மருத்துவ பரிசோதனைகள் பெற அல்லது புதுப்பிக்க இது பொறுந்தும்.

Primary care திட்டத்தை Work Pass அனுமதி வழங்கப்பட முன்னர் அல்லது புதுப்பிக்க முன்னர் அல்லது புதிதாக வருகை தந்த புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக இதனை அவர்களுடைய முதலாளிகள் வாங்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.