PIE நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிள் விபத்தில் 43 வயது நபர் உயிரிழப்பு!
அக்டோபர் 24 அன்று சாங்கி விமான நிலையத்தை நோக்கி பான் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்வேயில் (PIE) நடந்த விபத்தில் 43 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த துணை மருத்துவரால் அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.
அவரது மோட்டார் சைக்கிள் சறுக்கி விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தியது.
விபத்து அதிகாலை 4:50 மணியளவில் இடம் பெற்றது,
போலீஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.