மோசடி செய்ததாக 58 வயது நபர் மீது வழக்கு!

0

சிங்கப்பூரின் டம்பைன்ஸ் நகர கவுன்சிலை, வாட்டர் பம்ப் மாற்றத்திற்காக அதிக பணம் செலுத்த வைத்து ஏமாற்றியதாக 58 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வரை பம்ப் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இவர், அந்த காலகட்டத்தில் நகர கவுன்சிலுக்கு 3,80,000 சிங்கப்பூர் டாலருக்கும் (சுமார் 2 கோடியே 85 லட்சம் இந்திய ரூபாய்) அதிகமான 203 போலி பில்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

பில்களில் குறிப்பிட்டிருந்ததைப் போல, மலிவான வகை வாட்டர் பம்ப்களை நிறுவாமல், அதிக விலையுள்ள பல-நிலை வாட்டர் பம்ப்களை நிறுவி நகர கவுன்சிலை ஏமாற்றியதாக அவர் மீது புகார் உள்ளது.

இதன் மூலம் நகர கவுன்சில் கூடுதல் பணம் செலுத்தியதாக தெரிகிறது. மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.