பூன் லே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஒரு தீயணைப்பு வீரர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

0

ஜூலை 24-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.20 மணியளவில், பூன் லே டிரைவில் உள்ள பிளாக் 197D எனும் குடியிருப்பு கட்டிடத்தின் ஐந்தாவது மாடி வீட்டின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது சமையலறையில் இருந்து வெள்ளை புகை எழுந்து வந்தது. இந்த நிலையில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேறி, அருகிலுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் நடைபாதையில் குழுமினார்கள்.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை தண்ணீர் குழாய்கள் மூலம் கட்டுப்படுத்தினர். இந்த பணியின் போது, ஒரு தீயணைப்பு வீரர் சோர்வும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அவரை உடனடியாக பரிசோதித்த துணை மருத்துவர், மருத்துவமனையில் சோதனைக்காக அனுப்பினார். அவர் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மூன்று நாள் ஓய்வு வழங்கப்பட்டது.

தீ விபத்தின் காரணம், கவனமின்றி விட்டுச் செல்லப்பட்ட சமையல் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, SCDF பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, சமையலின் போது எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பயன்படுத்தாதபோது மின்சாரம் மற்றும் எரிவாயுவை அணைக்க வேண்டும் என்றும் நினைவூட்டியது.

Leave A Reply

Your email address will not be published.