ஓட்டுநர் இல்லாமல் 70 கிலோமீட்டர் பயணித்த சரக்கு ரயில்! காஷ்மீரில் பரபரப்பு!
காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஒன்று 70 கிலோமீட்டர் தூரம் பயணித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கை பிரேக்கை (hand brake) போடாமல் ஓட்டுநர் இறங்கிய நிலையில், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சென்ற ரயில், 5 ரயில் நிலையங்களைக் கடந்து, பஞ்சாபின் ஹோஷியார்பூர் பகுதியில் நின்றுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
ஓட்டுநர் இல்லாமல் ரயில் இயங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜம்மு காஷ்மீர் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் இல்லாமல் சென்ற ரயில் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.