நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு!
அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து ஹூஸ்டன் செல்லும் பிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் தனது பின்னால் இருந்த பயணியிடம் இருக்கையை மாற்றுமாறு கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் கடுமையாக முடிய, அந்த வாலிபர் கோபத்தில் இருக்கை மற்றும் ஜன்னலை காலால் உதைத்து உடைக்க முயன்றார். பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். இதைக் கண்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உடனே அந்த வாலிபரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினார்.
விமானம் ஹூஸ்டன் சென்றிறங்கியவுடன் போலீசார் வந்துவிட்டு, அந்த வாலிபரை கைது செய்தனர். பயணிகள் அனைவரும் பிறகு நிம்மதியாக வெளியேறினர்.