ஒரு இளைஞர் உடல் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் நாணயங்கள், காந்தங்களை விழுங்கி ஆபத்தில் சிக்கினார்!

0

டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட 26 வயது இளைஞர் ஒருவர், உடலை வலுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையில் நாணயங்கள் மற்றும் காந்தங்கள் விழுங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய குடலில் சிக்கியிருந்த 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை டெல்லி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். உடல் வலிமை மேம்படுத்த துத்தநாகம் (Zinc) உதவும் என்ற தவறான நம்பிக்கையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 நாட்கள் தொடர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அந்த இளைஞர் மருத்துவரை அணுகியுள்ளார். சி.டி. ஸ்கேன் செய்ததில் அவரது வயிற்றில் நாணயங்களும் காந்தங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இவை குடலிலும் அடைப்பை ஏற்படுத்தியிருந்தன. சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவை அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன. தற்போது அவர் நலமுடன் தேறி வருகிறார். இதுபோன்ற பொருட்களை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.