கனமழையில் மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு!
24 வயது இளைஞர் ஒருவர் இன்று காலை 7:20 மணியளவில் AYE நெடுஞ்சாலையில், MCE-யை நோக்கி செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளுக்கும் லாரிக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
கனமழை பெய்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையின் (SCDF) மருத்துவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார்.
விசாரணைக்கு உதவி வருகிறார் 46 வயதான லாரி ஓட்டுநர்.சாலை விபத்துகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின் இருக்கையில் பயணிப்பவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பலியானோரின் எண்ணிக்கை 44.7% அதிகரித்து மொத்தம் 68 உயிர்கள் பலியாகியுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள அனைத்து வாகனங்களில் 15%-க்கும் குறைவாகவே மோட்டார் சைக்கிள்கள் இருந்தாலும், அந்த ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் பாதியிலும் மேற்பட்டவை மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடையதாகவே இருந்தன.
அதிகமாக சாலை விபத்துக்களில் பலியானவர்களில் பாதியளவு பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் பின் இருக்கையில் சென்றவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு, 4,290 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களுடன் பயணித்தவர்கள் விபத்துகளில் காயமடைந்துள்ளனர்.
அதாவது, தினந்தோறும் சராசரியாக 12 பேர் மோட்டார் சைக்கிள் தொடர்பான விபத்துகளில் சிக்கியுள்ளனர்.
சிங்கப்பூர் சாலைகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அபாயங்களை இந்த புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
image The straits times