சிங்கப்பூரில் கனரக வாகன ஓட்டுநர் licence Class 4 பெறுவது எப்படி?

0

சிங்கப்பூரில் கனரக வாகனங்களை இயக்க வேண்டுமா? அதற்கு Class 4 ஓட்டுநர் உரிமம் அவசியம்.

இந்த உரிமம் பெற சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை வகுத்துள்ள சில விதிமுறைகளைப் பின்பற்றி, அதற்கான தகுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

தகுதிகள் என்ன?

வயது குறைந்தது 21 ஆக இருக்க வேண்டும்.
கனரக வாகனங்கள் இயக்க உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
செல்லுபடியாகும் Class 3 ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் அவசியமாகும் .

நல்ல நற்பெயர் கொண்ட, Class 4 வாகனங்களுக்கான ஓட்டுநர் பாடநெறிகளை வழங்கும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேருங்கள்.

போக்குவரத்து விதிகள், சாலைப் பாதுகாப்பு, வாகனங்களின் இயங்கும் விதம், இடையூறுகளை அறிதல் போன்றவற்றை கவனமாகக் கற்கவேண்டும்.

ஓட்டுநர் பள்ளியில் நடத்தப்படும் Basic Theory Test (BTT) தேர்வில் தேர்ச்சி அவசியம்.

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்றுனர்களின் வழிகாட்டுதலுடன் கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சியில் ஈடுபடுங்கள். வாகனத்தை கையாளுதல், நிறுத்துதல், திருப்புதல் போன்ற திறன்களில் தேர்ச்சி பெறுங்கள்.

போக்குவரத்து காவல்துறை நடத்தும் நடைமுறை ஓட்டுநர் தேர்வுக்கு முன்பதிவு செய்து, அதில் கலந்துகொண்டு. பல்வேறு சூழல்களிலும் கனரக வாகனங்களை இயக்கும் திறனை வெளிப்படுத்துங்கள். உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பதும் அவசியம்.

நடைமுறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், தேவையான ஆவணங்கள் (மருத்துவச் சான்றிதழ், BTT தேர்ச்சி முடிவு போன்றவை) தயார் செய்யுங்கள். போக்குவரத்து காவல்துறையில் விண்ணப்பக் கட்டணத்துடன் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்.

உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட உடன், Class 4 ஓட்டுநர் உரிமம் கிடைக்கும். இனி, சிங்கப்பூரில் சட்டப்படி கனரக வாகனங்களை இயக்கலாம்.

மேலும் வாசிக்க

Leave A Reply

Your email address will not be published.