பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டர்: அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தரையில் விழுந்த கார்!
மலேசியாவின் கோலாலம்பூரில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கார் கீழே விழுந்ததில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
78 வயதான ஓட்டுநர் ஒருவர் பார்க்கிங் செய்யும் போது தற்செயலாக பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், கார் தடையை மீறி தரையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் பிப்ரவரி 9 ஆம் தேதி பங்கசபுரி செரி மலேசியா அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்த போது டிரைவர் மட்டும் காரில் இருந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் உள்ள வீடியோக்கள் கார் தலைகீழாக தரையிறங்குவதைக் காட்டுகின்றன, அதே நேரத்தில் அதிர்ச்சியடைந்த டிரைவர் அருகில் அமர்ந்து ஒரு நபர் அவரை ஆறுதல்படுத்தினார்.
சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.