அண்ணாநகர் சாலை விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் ஏடிஎம் மையத்தில் மோதியது!
அண்ணாநகர் 2வது நிழற்சாலையில், (பிப்ரவரி 5) அதிகாலையில் ஒரு கார் திடீரென வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள ஏடிஎம் மையத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஐந்து பேருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைப் பற்றி அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு படையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.