பணியிட விபத்தில் பங்களாதேஷ் தொழிலாளி உயிரிழப்பு!
31 வயதான பங்களாதேஷ் தொழிலாளி ஜனவரி 25 அன்று 24 ராஃபிள்ஸ் பிளேஸில் உள்ள கட்டுமான தளத்தில் 3 மீட்டர் ஆழமான குழியில் விழுந்து இறந்தார்.
பிற்பகல் 2:30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றது
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) பிற்பகல் 3 மணியளவில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புப் படையினரையும் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவையும் (DART) சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
கயிறுகள் மற்றும் சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி, தொழிலாளியை மீட்க இரண்டு DART மீட்புப் பணியாளர்கள் குழிக்குள் இறக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக SCDF துணை மருத்துவரால் அறிவிக்கப்பட்டது.
விசாரணை இடம்பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். பணியிட சம்பவம் குறித்து மனிதவள அமைச்சகம் விசாரித்து வருகிறது.