கிம்ஹே விமான நிலையத்தில் தீப்பிடித்த விமானம் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்!
தென் கொரியாவின் பூசானில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி 28, 2025) 176 பேருடன் ஏர் பூசன் விமானத்தின் வால்பகுதியில் தீப்பிடித்தது.
சம்பவம் இடம்பெற்ற போது விமானம் ஹாங்காங்கிற்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அனைத்து 169 பயணிகளும் ஏழு பணியாளர்களும் ஊதப்பட்ட ஸ்லைடைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.